பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் 02 கிராம் 240 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடஹமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1328.png)
இவர் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 57 வெளிநாட்டு நாணயத்தாள்கள் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.