தமிழகத்தில் உள்ள பகுதியொன்றில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சென்னை அருகே உள்ள தாம்பரம், சேலையூர் மகாலட்சுமி நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் – உமாபதி அவர்களுக்கு பிறந்த 11 மாத ஆன அர்ச்சனா என்ற பெண் குழந்தை இவ்வாறு உயிரிழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1335-edited.png)
கடந்த (29)பெற்றோர் இருவரும் குழந்தையை அருகில் படுக்க வைத்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அதிகாலை வேளை அருகில் படுத்திருந்த குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வீடு முழுவதும் தேடியுள்ளனர்.
அப்போது வீட்டில் உள்ள பக்கெட் ஒன்றில் குழந்தை அர்ச்சனா மிதப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது தண்ணீரில் விழுந்ததில் மூச்சுத் திணறி குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1336.png)
இது தொடர்பாக தகவல் அறிந்த சேலையூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது இரவு பெற்றோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, குழந்தை தானாகவே திறந்திருந்த கதவு வழியாக வெளியே சென்றது தெரியவந்தது.
வீட்டுக்குள் இருந்த தண்ணீர் பக்கெட்டை இழுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக, பக்கெட்டிற்குள் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.