உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 15 மாதங்களுக்கு மேல் முடிவில்லாமல் நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பண உதவிகளை வழங்கி வருகின்றது.
ரஷ்ய இராணுவமும் உக்ரைன் மீது அதி பயங்கர தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ரஷ்ய ஆக்கிரமிப்பு மாகாணமான லுகான்ஸ்க் அருகே கர்பாட்டி கிராமத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் ரஷ்ய வீரர்கள் பதுங்கி இருப்பதாக உக்ரைனுக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து, அங்கு உக்ரைன் இராணுவம் குண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளது, இந்த தாக்குதலில் அந்த கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளது.
அதேசமயத்தில் கட்டிடத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.