இந்தியாவின் ஜம்மு- பூஞ்ச் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் பஸ் ஒன்று கவிழ்ந்து ஏற்பட்டுள்ள விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், அக்னூர் பகுதியில் உள்ள தாண்டா மோர் என்ற பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/06/image.png)
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்த நிலையில், பஸ்ஸில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.