ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள் என்று கூறப்பட்டு, இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களையும், வழிநடத்தியதாக கூறப்பட்ட சந்தேகநபர், கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒஸ்மான் புஷ்பராஜ் ஜெரார்ட் என்ற குறித்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (31) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/06/image-2.png)
எவ்வாறாயினும், இவரை கைது செய்ய உதவுவோருக்கு 20 இலட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்திருந்தனர்.
அத்துடன், ஐ எஸ் ஐ எஸ் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்ட 4 இலங்கையர்களும் கொழும்பில் இருந்து சென்னை ஊடாக அஹமதாபாத் விமான நிலையத்துக்கு சென்ற போது இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பாகிஸ்தானை சேர்ந்த அபு என்பவரின் கட்டளைப்படி இந்தியாவில் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களை அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.