தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (31 ) இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை பிரதேசத்தில் இருந்து லிந்துலை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் தலவாக்கலையை நோக்கி பயணித்த மோட்டார் சைக்களும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான விசாரணையை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.