நிலவில் இருந்து மண், பாறை மாதிரிகளை கொண்டு வர சீனா கடந்த மார்ச் 3ம் திகதி சாங்-இ 6 விண்கலத்தை லாங் மார்ச்-5 ராக்கெட்டில் நிலவுக்கு அனுப்பியுள்ளது.
குறித்த சாங்-இ 6 விண்கலம் நேற்றைய தினம் (02) காலை நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விண்கலம் நிலவின் தொலைதூர பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கியதாக சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்தது.
இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் பாதி பகுதியான தென் துருவ எய்ட்கன் படுகையில் உள்ள ஒரு பள்ளத்தில் விண்கலம் தரையிறங்கியுள்ளது.
அதேசமயம் விண்கலம் தரையிறங்கிய 48 மணித்தியாலத்திற்குள் குறித்த பகுதியில் துளையிடத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேலும் நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரிக்க ஒரு ரோபோ பணியை தொடங்கும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.