பல்லேகல தும்பர சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் சுகயீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வைத்திய சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றதாக பல்லேகல காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பாடசாலை மாணவன் ஒருவருக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கண்டி, தன்னே கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த மலித் நிசன்சல சஞ்சீவ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/06/image-184.png)
கண்டி, அம்பிட்டிய – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே இதில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்தவேளை இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மீது பல குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சந்தேக நபரை மீண்டும் கைது செய்ய காவல்துறையினர் கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.