உலகத்தன்மம் சமூக அமைப்பின் யாப்பு அங்கீகார நிகழ்வு இன்று(05) காலை 8.30 மணி அளவில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் அமைப்பின் அமைப்பாளர் யோ. இதயகீதன் தலைமையில் வீ.குகதாசன் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உலகத்தன்மம் சமூக அமைப்பு இயங்கு நிலையில் உள்ள மண்முனை வடக்கு, மண்முனை பற்று, மண்முனை தென் எருவில் பற்று, போரதீவு பற்று ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அமைப்பின் அங்கத்தவர்கள், வழக்கமான உறுப்பினர்கள், இணைப்பு உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள், நிறைவேற்று குழு உறுப்பினர்கள், துறை சார் அதிகாரிகள் மற்றும் பிரதேச அமைப்பாளர் இ.செந்தூரன் உட்பட 80 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உலகத் தன்மம் சமூக அமைப்பின் யாப்பு அங்கீகாரத்திற்கான கையொப்பங்களையும் இட்டனர்.
இந்நிகழ்வை உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ்ராஜேந்திரன் மாவட்ட மட்டத்தில் நடந்த யாப்பு அங்கீகார நிகழ்வை சமூக நல்ல நன்மைக்காக இணைய வழி மூலமாக ஆரம்பித்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அமைப்பின் உறுப்பினர்கள் யாப்பில் உள்ள தலைப்புகளை எடுத்து உரைத்தனர்.
மேலும் மட்டக்களப்பு மாவட்ட அதிபர் திருமதி ஜெ. ஜெ. முரளிதரன் அவர்களும் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி முரனீஸ்வரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
மேலும் சிரேஷ்ட பொலீஸ் அத்தியச்சகர் அமல் A. எதிரிமான்ன, வலயக்கலை பணிப்பாளர் திருமதி எஸ் புலேந்திரன், உதவி பிரதேச செயலாளர்கள் திருமதி.சுபா சுதாகரன் மற்றும் பொறியியலாளர் மாநகர சபை மட்டக்களப்பு திருமதி எஸ் லிங்கேஸ்வரன், மாகாண சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் திரு எஸ் அருள்மொழி, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஜனாப் எம் எம் அலியார், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி எஸ் சந்திரகலா, பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி எ. கலா ராணி, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஜனாப் ரிஸ்வி, சிறுவர் உரிமை மேம்பாடு உத்தியோகத்தர் திரு எ. அருட் செல்வம் ஆகியோர் சிறப்பு அதிதிகள் கலந்து கொண்டனர்.
அதிதிகள் உரையாற்றுகையில் இவ் அமைப்பு மூலம் சமூக பயனாக்கம் பெற வேண்டுமென வாழ்த்துரை வழங்கினர்.
அதேசமயம் இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.