இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசைகள் ஆரம்பித்திருக்கின்றன.
நாட்டில் கோட்டாபய ஆட்சிக்காலத்தில் உலகளாவிய ரீதியில் பெரும் வங்குரோத்து அடைந்த நாடாக இலங்கை மாறியிருந்த போதிலும் மக்களின் போராட்டத்தினால் கோட்டா பதவி நீக்கப்பட்டு ரணில் ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றியிருந்தார்.
கடந்த காலங்களில் நீண்ட எரிபொருள் வரிசையில் மக்கள் காத்திருந்து எரிபொருளை பெற்றிருந்த போதிலும் கியூ.ஆர் நடைமுறையின் பின்னர் நீண்ட வரிசைகள் முற்றாக காணப்படாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
கடந்த (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட போதிலும் நாட்டில் பல இடங்களில் மீண்டும் எரிபொருள் வரிசை ஆரம்பித்திருக்கிறது குறிப்பாக வவுனியா,அம்பாறை,கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளின் நீண்ட வரிசைகள் அதிகம் காணப்படுவதாக மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் நேற்றய தினம் திருகோணமலையில் அதி நீண்ட வரிசைகளின் பொதுமக்கள் காத்திருந்து எரிபொருள் பெற்றுக்கொண்டிருந்ததை காணக்கூடியவாறு இருந்தது. இது குறித்து எமது Battinaatham ஊடகம் பொதுமக்களிடம் வினவிய போது, திருமலை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சாதாரணமாக 10 பேராவது வரிசையில் நின்று எரிபொருளை பெற்று செல்வர். ஆனால் இப்பொழுது காணப்படும் எரிபொருள் வரிசை வழமைக்கு மாறாக அதிக படியானோர் நிற்கின்றனர் என்று கருது தெரிவித்தனர்.
அதேசமயம் மீண்டும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் தொடர்பில் பொது மக்களுக்கு கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சர் நாட்டில் இனி எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.