நேற்று மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (01) மட்டக்களப்பு Treatooo விடுதியில் இடம்பெட்டிருந்தது.
ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் மட்டக்களப்புக்கு நான் ஆளுநராக வந்ததன் பின்னர் ஊடகவியலாளர்களைத்தான் நான் முதலில் சந்திக்கிறேன். தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்திப்பேன் கலந்துரையாடுவேன்.
ஜனாதிபதி என்னை நம்பி அனுப்பி வைத்துள்ளார் நான் எனது கடமைகளை சரிவர செய்வேன்,நிருவாகம் எனக்கு புதிதல்ல நான் பாரளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதி அமைச்சர்,மாகாண சபை உறுப்பினர் என பதவிகளை வகித்தவன்.வளங்கள் நிறைந்த மாகாணம் இது அதனை சரியாக முகாமைத்துவம் செய்து நாட்டின் கடனை அடைக்க உதவுவேன்.அனைத்து மாகாணங்களும் இணைந்துதான் நாட்டின் கடன்சுமையை குறைக்க பாடுபடவேண்டும்.
மேலும் முக்கிய விடயங்களை பற்றி பேசியிருந்த கிழக்கு மாகாண ஆளுநரிடம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புத்தொடர்பில் கேள்வி எழுப்பிய போது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தொந்தரவு இல்லாத வகையில் புலனாய்வு கடமைகளை முன்னெடுக்க புலனாய்வு துறையினருக்கு ஆலோசனை வழங்கப்படும். என்னையும் புலனாய்வுத்துறையினர் புலனாய்வு செய்யக்கூடும் அது அவர்களின் தொழில் எனவும் சுட்டிக்காட்டினார்.