உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் அமைச்சினால் பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான சுற்றாடல் தின நிகழ்வு நேற்று புதன்கிழமை (05) மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் கலந்துகொண்டார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/06/image-188.png)
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஈச்சந்தீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் சுற்றாடல் சார் கண்காட்சி இதன்போது நடைபெற்றது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் டி.தர்மதாச தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் பயனுறுதி மிக்க நில பயன்பாட்டின் ஊடாக ‘நலம் மிகுந்த நாடு’ எனும் கருப்பொருளுக்கு அமைவான கண்காட்சியை மாவட்ட அரசாங்க அதிபர் திறந்துவைத்தார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/06/image-189.png)
அதனைத் தொடர்ந்து பாடல், கலை கலாசார நிகழ்வுகளும் சுற்றாடல் சார்பான உரைகளும் இதன்போது நிகழ்த்தப்பட்டன.
இன்றைய நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்யானந்தி, மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உயர் அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-05-at-21.16.31_8b3cedd7.jpg)