டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தொடரில் நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற 13-வது லீக் போட்டியில் அயர்லாந்து – கனடா மோதின.
அயர்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து,
கனடா அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஜான்சன், நவ்நீத் தலிவால் களமிறங்கினர். இதில் நவ்நீத் தலிவால் 6 ஓட்டங்களிலும், ஆரோன் ஜான்சன் 14 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இதையடுத்து களம் இறங்கிய பர்கத் சிங் 18 ஓட்டங்களிலும், தில்ப்ரீத் பஜ்வா 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் கிர்டன், ஷ்ரேயாஸ் மொவ்வா ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர்.
நிக்கோலஸ் கிர்டன் 49 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இதையடுத்து களம் இறங்கிய தில்லன் ஹெய்லிகர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இறுதியில் கனடா 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் கிரேக் யங், பேரி மெக்கர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 138 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து தொடக்க வீரர்களாக ஆண்டிரூ மற்றும் அணி தலைவர் பால் ஸ்டார்லிங் களமிறங்கினர். அணி தலைவர் பால் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆண்டிரூ 17 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த டக்கர் 10 ஓட்டங்களிலும், ஹெரி 7 ஓட்டங்களிலும், கேம்ஹர் 4 ஓட்டங்களிலும், ஹரித் 3 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இறுதியில் அயர்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் அயர்லாந்தை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கனடா அபார வெற்றிபெற்றது.