2024 ரி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு 125 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்ததுடன் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகப்பட்சமாக 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன் முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹுசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். அதேபோல், டஷ்கின் அஹமட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி, 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பில் டவ்ஹித் ஹ்ரிடோய் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் நுவான் துஷார நான்கு விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.