யாழ் மாவட்ட சாரணர் சங்கத்திலிருந்து 25 சாரணர்கள் இந்த வருடத்திற்கான ஜனாதிபதி விருதினை பெற்றிருக்கிறார்கள்
25 சாரணர்களில் முதல்முறையாக 10 பெண் சாரணர்களும் ஜனாதிபதி விருதினை பெற்றிருக்கின்றார்கள்.
இலங்கை முழுவதும் 700 க்கும் மேற்பட்ட சாரணர்கள் ஜனாதிபதி விருதினை பெற்றுள்ளதோடு இலங்கையின் 37 சாரண மாவட்டங்களில் இருந்தும் ஜனாதிபதி விருதினை பெற்றுகொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 பெண் சாரணர்கள் இம்முறை ஜனாதிபதி விருதினை பெற்றிருக்கிறார்கள்.
8 பெண் மாணவர்கள் கொக்குவில் இந்து கல்லூரியில் இருந்தும், வைத்தீஸ்வரா கல்லூரியில் இருந்து இரண்டு பெண் சாரணர்களும் முதன்முதலாக ஜனாதிபதி விருதினை பெற்று யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
குருநாகல் மாகாண சபை மண்டபத்தில் இடம்பெற்ற சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வில் சாரணிய பிரதம ஆணையாளருடன் வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டதோடு, நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மேல்மாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டு ஜனாதிபதி விருதினை சாரணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.