பௌத்தத்தை அவமதித்தமைக்காக நடாஷாவை கைது செய்ய முடியும் என்றால் முஸ்லிம்களையும், இந்துக்களையும் இழிவுபடுத்திய ஞானசார தேரர் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினை இட்டு அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்தியர் ஷாபியின் வாழ்க்கையை அழித்த அயோக்கியர்களிற்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றவாளிகளை கைது செய்து தண்டிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்னமும் காலம் உள்ளது எனவும், அவ்வாறு அவர் செயற்பட்டால் அதுவே உண்மையான ஜனநாயக நாடாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.