உலகத்தன்மம் சமூக அமைப்பின் மூலமாக பழமரங்கள் மற்றும் பயிர்க் கன்றுகள் வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இவ் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் அனுமதியுடன் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கே இந்த மரம் நடும் திட்டம் ஆரம்பமாகி இருந்தது.
அதன் அடிப்படையில் இதன் 2ஆம் கட்டமாக மட்/புதூர் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் நேற்றைய தினம் (12) அன்று உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ் ராஜேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில், அமைப்பின் மண்முனை வடக்கு பிரிவு திட்ட செயற்பாட்டுக் குழுவின் தலைவியும், கல்வி செயற்பாட்டு அதிகாரியுமான திருமதி.திருமலர்ச்செல்வி மரியநாயகம், அமைப்பின் மண்முனை வடக்கு சமூக அபிவிருத்தி அதிகாரி இ.செல்லத்தம்பி சுரேஷ், அமைப்பின் மண்முனை வடக்கு விவசாயத்துறை அதிகாரி திரு.பாக்கியம் ஜோச் எட்வேட் இவர்களின் ஒருங்கிணைத்த நடவடிக்கையாக பாடசாலை வளாகத்தில் பழமரக் கன்றுகள், பயிர்க் கன்றுகள், நிழல் தரும் மரங்கள் என்பன நடப்பட்டன.
இதில் பாடசாலை அதிபர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்போர் ஒத்துழைப்பு வழங்கி இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இவ் நிகழ்விற்கு உலகத்தன்மம் சமூக அமைப்பின் அமைப்பாளர் யோகேஸ்வரநாதன் இதயகீதன் அவர்கள் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு குறித்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கி இருந்தார்.
இந்த நிலையில் இவ் அமைப்பின் மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் இ.செந்தூரன் அவர்களும், அமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் திட்டமிட்டபடி இச் செயற்பாட்டை செய்து முடித்திருந்ததுடன் இன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதாக உலகத்தன்மம் சமூக அமைப்பின் சார் மேலும் தெரிவித்திருந்தனர்.