டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி, அமெரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலும், கடைசி பந்திலும் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் அமெரிக்கா 42 ஓட்டங்களை எடுத்தது.
12-வது ஓவரில் 11 ஓட்டங்களும், 13-வது ஓவரில் 12 ஓட்டங்களும் எடுத்தது. நிதிஷ் குமார் 27 ஓட்டங்களிலும், ஸ்டீவன் டெய்லர் 24 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்களை எடுத்தது.
இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 9 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 111 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 18. 2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.