காலநிலை மாற்றமும் சவால்களும் என்ற தலைப்பில் இவ் வருடத்திற்கான இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 61 வது வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை இரு நாள் செனற்சபை கூட்டமானது கிரானில் உள்ள உவெஸ்லி மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டமானது வாழைச்சேனை சேகரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையினால் வருடா வருடம் வடகிழக்கிலுள்ள அனைத்து திருச்சபைகளையும் ஒன்றினைத்து நடாத்தப்படும் கூட்டத் தொடராகும். அதன் பிரகாராம் 2024 ஆம் ஆண்டிற்கான மெதடிஸ்த்த திருச்சபையின் 61 அவது செனற் சபையானது வாழைச்சேனை சேகரத்தினால் கிரானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வட கிழக்கிலுள்ள மெதடிஸ்த்த திருச்சபைகளின் குருமார்கள், மூப்பனார்கள் கலந்து கொண்டு இவ் வருடத்திற்குரிய திருப்பணிகளை மீளாய்வு செய்வது, புதிய பணித்திட்டங்களை வகுப்பதே இந்த கூட்டத்தின் செயற்பாடாகும்.
நேற்று 15 ஆம் திகதி தொடக்கம் இன்று 16 ஆம் திகதி வரை இந்த இரு நாள் நிகழ்வு நடைபெற்றது.
இறுதி நாளான இன்றைய நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக புவியற்துறை சிரேஸ்ட விரிவரையாளர் ஆர்.கிருபைராஜா கலந்து கொண்டு காலநிலை மாற்றம் தொடர்பான விரிவுரைகளை நடாத்தினார். நேற்றைய நாள் (15) நிகழ்வில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நேற்றை ஆரம்ப நிகழ்வில் கிரான் கொழும்பு பிரதான வீதி வழியாக கலாச்சார நடனங்களை உள்ளடக்கியவாறான ஊர்வலமானது உவெஸ்லி மண்டபம் வரை சென்று, அங்கு வடகிழக்கிலுள்ள அனைத்து மெடிஸ்த திருச்சபைகளின் குருமார்களினால் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டது.
அதேசமயம் மாலை மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றதுடன், செனற் சபையினால் இவ்வருடத்திற்கான இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை செயலாளராக வாழைச்சேகரத்தின் அருட் கலாநிதி கே.எஸ் நிசாந்த அவர்கள் சபையோரினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.