ஆபத்தான சுவாச நோய்த்தொற்றுகளுடன் கூடிய HMPV வைரஸ் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
HMPV வைரஸால் இலங்கை இதுவரை பாதிக்கப்படவில்லை என கொரோனா தொடர்பான சுகாதார அமைச்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில் HMPV வைரஸ் பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய இந்த வைரஸ் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
இதுவரை இந்த வைரஸ் இந்த நாட்டிற்கு பரவவில்லை எனவும் சுகாதார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனமாகவும் தயார் நிலையிலும் செயற்பட்டு வருவதாகவும் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்துள்ளார்.