எரிபொருள் ஒதுக்கீடு முறை இரத்து செய்ய எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
திவுலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்து வெளியிட்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த குறித்த விடயத்தை சுட்டிகாட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
சீனாவின் சினோபெக் நிறுவனம் இந்த நாட்டில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தவுடன் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு முறை இரத்து செய்ய எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.
அதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நடத்தப்படும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதற்கும், இலங்கையில் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் சினோபெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கடந்த மே 22 அன்று’ சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்க இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஒப்பந்தம் வாயிலாக அனுமதி வழங்கியிருந்தது.
அதேசமயம் தற்போது இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களாக i,o,c மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.