மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று முன்தினம் (18) மாலை ஏற்பட்ட வேகமான மழையுடன் கூடிய காற்றினால் எருவில் கிராமத்தில் இரு இடங்களில் பிரதான வீதியை குறுக்கறுத்து தென்னை மரம் மற்றும் வேம்பு மரம் என்பன வீதியில் விழுந்தன.
இவை போக்குவரத்துக்கு அபாயகரமானதாக காணப்பட்டதுடன், மின்கம்பங்களில் விழுந்து கிடந்தன..
இது தொடர்பாக மக்கள் பிரதேச சபை செயலாளாரிடம் அறிவித்தனர்.
குறித்த இடத்துக்கு உடன் விரைந்த சபையின் செயலாளார் சா.அறிவழகன் அவர்கள் தனது ஊழியர்களை குறித்த மரங்களை அகற்றுமாறு களத்தில் நின்று செயற்பட்டு மரங்களை அகற்றியமை குறிப்பிடத்தக்கது.
இச் செயற்பாட்டுக்கு ஊர் மக்கள் நன்றியினை தெரிவித்திருந்தனர்.