Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியாவில் நிலநடுக்கம் பதிவு; பாரிய நிகழ்வுக்கான முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என்கிறார் விரிவுரையாளர்!

வவுனியாவில் நிலநடுக்கம் பதிவு; பாரிய நிகழ்வுக்கான முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என்கிறார் விரிவுரையாளர்!

2 years ago
in செய்திகள்

வவுனியாவில் பதிவான நிலநடுக்கம் பாரிய நிலநடுக்கத்துக்கான முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா மற்றும் அதனை சூழவுள்ள பல பகுதிகளில் நேற்றைய தினம் (19) இரவு 11.02 மணியளவில் நிகழ்ந்த புவி நடுக்கத்தின் அளவு 2.3 ரிக்டர் என தேசிய புவிச்சரிதவியல் மற்றும் கனிமவள பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தின் குவிமையம் (Epic Centre) தாண்டிக்குளத்திற்கும் கூமாங்குளத்திற்கும் இடைப்பட்ட மரிக்காரம்பளையாகும்.

இந்த குவி மையம் புவிமேற்பரப்பிலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன்று காலை நான் இது தொடர்பாக இட்ட பதிவில் கருத்துரைத்த பலர் கல் அகழ்வுச் செயற்பாடுகள், மற்றும் குழாய்க்கிணறு தோண்டுதல் செயற்பாடுகள் காரணமாக இந்த நிலநடுக்கம் தோன்றியிருக்கலாம் என தெரிவித்தனர். ஆனால் புவி நடுக்கத்திற்கும் இவைக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

வவுனியாவில் நிகழ்ந்த புவிநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது.

எனினும், இந்த கல்லகழ்வு மற்றும் குழாய்க்கிணறுகள் புவி மேற்பரப்பில் இருந்து வெறுமனே 100 மீற்றருக்குள்ளேயே நிகழ்கின்றன என்பதுடன் இவை வேறுபல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

பொதுவாக எதிர்வு கூற முடியாத இயற்கை அனர்த்தங்களில் புவி நடுக்கம் முதன்மையானது.

உலகின் பல பிரதேசங்களில் நிகழ்ந்த பாரிய புவி நடுக்க நிகழ்வுகள் இரண்டாகவே நிகழ்ந்துள்ளன.

முதலாவது மிக மெதுவானதாக வெறும் நடுக்கத்துடன் கூடியதாகவே அமைந்துள்ளது. இதனை உணர்ந்து கட்டுமானங்களை விட்டு வெளியே வந்து வெளிப்பிரதேசங்களில் நின்றால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டாவது புவி நடுக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாக்கலாம்.

அண்மைக்காலப் பகுதியில் இலங்கையின் கடற்பிராந்தியங்களிலும் நிலப்பகுதிகளிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அதிக அளவில் பதிவாகின்ற நிலையில் இவை எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவிலும் நில நடுக்கங்கள் இடம்பெறலாம் என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதலாம்

அத்துடன், அனர்த்தங்கள் தொடர்பான விழிப்புணர்வை இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் வழங்க வேண்டும்.

குறிப்பாக வெள்ளப்பெருக்கு, வரட்சி, புயல், சூறாவளி, நிலச்சரிவு, புவிநடுக்கம் தொடர்பான இயற்கை அனர்த்தங்கள் பற்றியும் வீதி விபத்துக்கள் மற்றும் தீ விபத்துக்கள் பற்றியும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இவற்றினால் ஏற்படும் உயிர் மற்றும் உடமை இழப்புக்களை தவிர்க்க முடியும் என புவியியல் துறை சிரஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நில அதிர்வானது ஒன்று திரட்ட சக்தியின் வெளிப்பாடு என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நில நடுக்கமொன்று குறித்த பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மலை நாட்டில் அல்லது நீர் நிலைகளுக்கு அருகாமையில் ஏற்படக்கூடிய நில நடுக்கங்களை விடவும் சமனிலையான தரைப் பகுதியைக் கொண்ட இந்த பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கம் சாதாரண நிலைமையாக கருதப்பட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இவ்வாறான ஓர் நில நடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மூன்றாவது குழந்தை பெறும் பெண் அரச ஊழியர்களுக்கு ஒரு வருடம் விடுமுறை; தமிழ்நாடு அரசு முடிவு
உலக செய்திகள்

மூன்றாவது குழந்தை பெறும் பெண் அரச ஊழியர்களுக்கு ஒரு வருடம் விடுமுறை; தமிழ்நாடு அரசு முடிவு

August 19, 2026
கல்முனை பாடசாலை ஒன்றில் மாணவ மாணவிகளிடம் பி.எச்.ஐ பாலியல் சேட்டை செய்ததாக முறைப்பாடு
செய்திகள்

கல்முனை பாடசாலை ஒன்றில் மாணவ மாணவிகளிடம் பி.எச்.ஐ பாலியல் சேட்டை செய்ததாக முறைப்பாடு

August 19, 2026
கல்லடி சுவாமி விபுலானந்தா கல்லூரி மாணவி  தற்கொலை; அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயக்கம் – மட்டக்களப்பில் 7 மாதங்களில் 84 தற்கொலைகள்
செய்திகள்

கல்லடி சுவாமி விபுலானந்தா கல்லூரி மாணவி தற்கொலை; அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயக்கம் – மட்டக்களப்பில் 7 மாதங்களில் 84 தற்கொலைகள்

August 19, 2026
ஜாம்பியாவில் தேர்தல்; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி
உலக செய்திகள்

ஜாம்பியாவில் தேர்தல்; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி

August 19, 2026
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமையேற்பு!
செய்திகள்

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமையேற்பு!

August 19, 2026
மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!
செய்திகள்

மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!

August 19, 2026
Next Post
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.