ஹொலிவுட் திரைப்படங்களுக்கு சீன அரசுதடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 54 வீதம் வரி விதித்த ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் ஹொலிவுட்டில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவிக்கின்றன.
அமெரிக்காவை விட சீனாவில் குறிப்பிடதக்க இலாபத்தைப் பெறும் ஹொலிவுட் திரைப்படங்களும் இருந்துவருகின்றன. மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில் ஹொலிவுட் திரைப்படங்கள் வெளியாகின்றன.

ஹொலிவுட் படங்கள் உலகளவில் செய்யும் வசூலில் 10% சீனாவில் இருந்து மட்டும் கிடைக்கிறது. இதனிடையே ஹொலிவுட் படங்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது.
இதற்கு முன்பு மேற்கொண்ட ஒப்பந்தங்களின்படி, சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள், ஹொலிவுட் படங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் விநியோகப் பணிகளைச் செய்துவந்தனர்.
வருவாய் பகிர்வின் அடிப்படையில் ஆண்டுக்கு புதிதாக 34 வெளிநாட்டுப் படங்கள் சீனாவில் வெளியிடப்பட்டு வருகிறது.இதற்கான பற்றுசீட்டு விற்பனையில் 25% வருவாய் சீன அரசுக்குக் கிடைக்கின்றது.
சீனாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வணிகத்தில், திரைப்படத் துறையும் ஒன்றாக உள்ளது.
தற்போது அமெரிக்கா விதித்துள்ள திருத்தப்பட்ட வரி விதிப்பின்மூலம் திரைப்பட வணிகமும் இரு நாடுகளுக்கு இடையே பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.