கொவிட் தடுப்பூசி நிறுவனமான ஃபைசர் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவின் – கன்சாஸ் பிராந்திய சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் மீது தடுப்பூசியின் இயலுமை குறித்த போலியான தகவல்களை வழங்கி இருப்பதாகவும், அதன் பக்கவிளைவுகள் தொடர்பான விபரங்களை மறைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களுக்கு அந்த நிறுவனம் நட்டயீட்டை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஃபைசர் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.