இலங்கையின் ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு கும்பாபிசேக பெருவிழா நேற்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கடந்த 16ஆம் திகதி கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பமாகியது.
இந்த கும்பாபிஷேக க கிரியைகள் தமிழ் மொழியில் ஆரம்பமானமை சிறப்பம்சமாகும்.
இலங்கையில் முதல் முதலாக தமிழில் இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள 21 கங்கை முதலான 21 கலங்களில் கொண்டுவரப்பட்ட தீர்தங்களை கொண்டு மதுரை அருள்மிகு ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலய தெய்வ நெறி தலைவர் சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி சுவாமி தலைமையில் பல இலங்கை இந்தியாவின் ஆதீனங்களின் சுவாமிகள் ஒன்றிணைந்து இந்த கிரியைகளை நடாத்தினார்கள்.
நேற்று முன்தினம் புதன்கிழமை அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்து நிகழ்வும் நடைபெற்றது.
நேற்றைய தினம் காலை விசேட யாக பூஜைகள் நடைபெற்றதுடன் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா (கும்பாபிஷேகம்) இடம்பெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.