இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்கள் இன்று (23) அதிகாலை யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/06/image-953.png)
இதன்போது, எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான கடற்றொழிலாளர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுன், அவர்களை கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைத்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.