Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு!

2 years ago
in செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும் தமது அடிப்படை உரிமைக்காகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் இன்றைய தினம் (24) பிரதேச செயலக நுழைவாயிலை மறைத்து மக்கள் போராட்டத்தை மேற்கொள்வதால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தின் 92ஆவது நாளான இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் தமது ஆதரவை மக்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் திங்கட்கிழமை(25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 92ஆவது நாளான இன்றும் அதிகளவான மக்கள் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பவனியாக செல்வதுடன் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயற்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளையும் கணடித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் இறுதியாக கடந்த 2019 ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை பல அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு!

தொடர்புடையசெய்திகள்

யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு!

August 20, 2026
ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை; ட்ரம்ப் எச்சரிக்கை!

August 20, 2026
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!
செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!

August 20, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

August 20, 2026
காருடன் மோதிய முச்சக்கர வண்டி; சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

காருடன் மோதிய முச்சக்கர வண்டி; சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

August 20, 2026
டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகும் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்!
செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகும் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்!

August 20, 2026
Next Post
தூர இடங்களிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கு இலவச தங்குமிட வசதி!

தூர இடங்களிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கு இலவச தங்குமிட வசதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு