ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக இந்த வாரத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயற்குழு இந்த வாரத்தில் கூடி சரத் போன்சேகாவிற்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பதவி நிலை எதுவாக இருந்தாலும் கட்சியின் கொள்கைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டியது அவசியமானது என கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
சரத் போன்சேகா ஒழுக்கமான முறையில் செயல்படுவதாக தென்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே சரத் பொன்சேகாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறு எனினும் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாது என மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
ராஜித, அதிபர் ரணிலை புகழ்ந்தாலும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை, சரத் பொன்சேகா போன்று விமர்சனம் செய்யவில்லை என ரஞ்சித் மத்துமபண்டார சுட்டிக்காட்டி உள்ளார்.