Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராமேஸ்வர மீனவர்களுக்கு தமிழக மீன்வளத்துறையினர் அறிவித்தல்!

இராமேஸ்வர மீனவர்களுக்கு தமிழக மீன்வளத்துறையினர் அறிவித்தல்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இராமேஸ்வர மீனவர்களிடம் தமிழக மீன்வளத்துறையினர் இன்று ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்தல் விடுத்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கடந்த ஒரு வாரத்தில் 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் எனவும், உயிர்காக்கும் உபகரணங்களை கையில் வைத்து கொள்ளுமாறும் இராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி உத்தரவின் பேரில் மீன்வளத் துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி வாயிலாக இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.

மீனவர் அடையாள அட்டை மற்றும் மீன்பிடி படகின் உரிய ஆவணங்களை வைத்துக் கொள்ளுமாறும் மீனவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் 10 நாகை மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக கைது நடவடிக்கைகள் தொடர்வதால், தற்போது இரு தரப்பு மீனவர்களிடையேயும் பதற்றமானதொரு சூழலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

October 2, 2026
ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!
செய்திகள்

ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!

October 2, 2026
எரிபொருள் விலை உயர்வு முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படவில்லை!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படவில்லை!

October 2, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு;  நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!
செய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு; நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!

October 2, 2026
நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!
செய்திகள்

நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!

October 2, 2026
பேருவளையில் ரூ.3 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்பு; ஒருவர் கைது!
செய்திகள்

பேருவளையில் ரூ.3 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்பு; ஒருவர் கைது!

October 2, 2026
Next Post
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய, அதிபர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம்!

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரிய, அதிபர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு