போதையற்ற எதிர்காலம்’ என்ற தொணிப் பொருளிலான சிறுவர் விளையாட்டு விழா வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
வாழைச்சேனை ஏ.ஓ.ஜி தேவ சபை வாழைச்சேனை வணக்கத்திற்குரிய போதகர் குலத்துங்க லக்ஷ்மணகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அதிதிகளாக தேவ சபையின் கிழக்கு பிராந்திய தலைவர் வணக்கத்திற்குரிய போதகர் எஸ்.பாஸ்கரன், கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகங்களின் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்த்தர்களான அ.அழகுராஜ்,.எம்.காசீம் ஆகியோர்களுடன் கிராமசேவகர் எஸ்.வரதராஜன் மற்றும் ஓய்வு பெற்ற கோட்டைக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சின்னத்தம்பி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது சிறுவர் இல்லங்கள் அமைக்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
அன்பின் இல்லம்-சந்தோசத்தின் இல்லம், சமாதானத்தின் இல்லம்.பொறுமையின் இல்லம் என நான்கு வகையான இல்லங்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கிடையே பல்வேறு வகையான கிராமிய, கலாச்சார ரீதியிலான விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.
இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளின் அடிப்படையில் பொறுமை இல்லம் முதலாம் இடத்தினையும், அன்பு இல்லம் இரண்டாம் இடத்தினையும், சமாதானம் இல்லம் மூன்றாம் இடத்தினையும் சந்தோசம் இல்லம் நான்காம் இடத்தினையும் பெற்றுக் கொண்டன.
இந்தநிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் நிகழ்வின் ஆரம்பத்தில் தேவ சபைகளினால் தேசிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை தேவ சபை அணி முதலாம் இடத்தினை பெற்றுகொண்டது.15 பிராந்தியங்களைச் சேர்ந்த 32 அணிகள் பங்குபற்றியிருந்தன.அன்றைய தினம் அவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.