இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கிறிஸ் சில்வர்வூட் விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்து, கிறிஸ் சில்வர்வூட், தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார்.
குறித்த கடிதத்தில், “சர்வதேச பயிற்சியாளராக இருப்பது என எனக்கு வாய்ப்பு வழங்கிய அன்பானவர்களிடமிருந்து நீண்ட காலத்திற்கு விலகி இருக்க வேண்டும்.
நான் இப்போது வீடு திரும்புவதற்கும், குடும்பத்தினருடன் ஒன்றாக சில உன்னதமான நேரத்தை செலவிடுவதற்கும் நேரம் வந்துவிட்டது.
இலங்கையில் நான் இருந்த காலத்தில் எனக்கு ஆதரவளித்த, வீரர்கள் பயிற்சியாளர்கள், அறை ஊழியர்கள் மற்றும் இலங்கை கிரிக்கட் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
உங்களின் ஆதரவு இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை. இலங்கை கிரிக்கெட்டின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு ஒரு பெருமைக்குரிய விடயமாகும்.
மேலும் நான் பல இனிமையான நினைவுகளை இங்கிருந்து எடுத்துச் செல்வேன்” என கூறியுள்ளார்.
கிறிஸ் சில்வர்வூட்டுடைய பதவிக்காலத்தில், இலங்கை தேசிய அணி 2022 இல் T20 ஆசிய கோப்பையை வென்றது. மற்றும் 2023 இல் 50ஓவர் ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டியது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல இருதரப்பு தொடர் வெற்றிகளைப் பெற்றது. இவற்றில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 50 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது மற்றும். பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு வெளிநாட்டு டெஸ்ட் தொடர் வெற்றி இலங்கை அணிக்கு பெரும் வலு சேர்த்தது.
இந்நிலையில், கிறிஸ் சில்வர்வுட்டின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துவதாக இலங்கை கிரிக்கெட் சபை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மற்றும் அவரது பதவிக்காலத்தில் அவர் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.