தெற்கு ஸ்லோவாக்கியாவில் ரயில் கடவையில் கடுகதி ரயிலுடன் பஸ் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
தலைநகர் பிராட்டிஸ்லாவாவிலிருந்து கிழக்கே 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நோவ் சாம்கி நகருக்கு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்து உள்ளூர் நேரப்படி சுமார் 17:00 மணியளவில் (16:00 BST) இடம்பெற்றுள்ளதோடு, 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.
விபத்தில் பஸ் மற்றும் ரயில் ஆகியவற்றின் சாரதிகளும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பஸ்ஸில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்றபோது ரயிலில் 200 பேரும், பஸ்ஸில் 9 பேரும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் சாரதி ரயில் தடம்புரள்வதை தடுக்க உடனடி செயற்பட்டுள்ளார். இதன்காரணமாக பயணிகளுக்கு காயங்கள், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக அந்நாட்டு ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விபத்து இடம்பெற சில வினாடிகளுக்கு முன் அவர் கட்டுப்பாட்டு அறைக்குள் குதித்து தீக்காயங்களுக்கு உள்ளாகினார்.
ஐந்து ஆம்புலன்ஸ்கள் மற்றும் மூன்று ஆகாய ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவசர சேவைகள் தெரிவித்தன.