ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் சரத் பொன்சேகாவை கட்சியில் இருந்து நீக்குமாறு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் அக்கட்சியின் உறுப்பினர்கள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொன்சேகா கட்சியை விட்டு வெளியேறவுள்ள நிலையில், அவரை முதலில் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் ஐக்கிய மக்கள் சக்தி சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சித் தலைமையை விமர்சித்ததற்காக பொன்சேகாவை பதவி நீக்கம் செய்ய கட்சிக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் அதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பொன்சேகா கட்சியை விட்டு வெளியேறினால், அவருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொன்சேகா விரைவில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாகவும், அண்மையில் அவர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நாடாளுமன்றத்தில் விமர்சித்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.