Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மூதூரில் கைது செய்யப்பட்ட 15 பேருக்கும் பிணை!

மூதூரில் கைது செய்யப்பட்ட 15 பேருக்கும் பிணை!

2 years ago
in செய்திகள்

மூதூர் – இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற மதுபானசாலைக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 15 பேரும் இன்று (28) மூதூர் நீதிமன்றத்தால் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கானது எதிராளிகள் சார்பாக நகர்த்தல் விண்ணப்பத்தின் மூலம் இன்றைய தினம் (28) மூதூர் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட அனைவரும் நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் முன்னிலையில் திறந்த நீதிமன்றில் நூற்றுக்கும் அதிகமானவர்களுடன் ஆள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தலா 50,000 பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததோடு, எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்ட மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இரவு 8.00 மணிக்குப் பின்னர் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருந்த கைகலப்பை காரணம்காட்டி அங்கிருந்தவர்கள்மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். பின்னர் அவ்விடத்திற்கு மேலதிக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அழைக்கப்பட்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீதும், அதனுடன் தொடர்புபடாத மக்கள் மீதும் வீடுகளில் இருந்த நிலையிலும், பாதுகாப்புத்தேடி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் மீதும் மிலேச்சுத்தனமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த சம்பவத்தில் பாடசாலை மாணவன் உட்பட 11 ஆண்களும், பாலூட்டும் தாய் உட்பட 4 பெண்களுமாக 15 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்ததுடன், 13 துவிச்சக்கரவண்டி, 11 மோட்டார் சைக்கிள், 3 முச்சக்கரவண்டி ஆகியனவும் பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்டவர்கள் மறுநாள் புதன்கிழமை (26) பொலிஸாரினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்கள். இதன்போது எதிர்வரும் யூலை மாதம் 3 ஆம் திகதி விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்று (27) வியாழக்கிழமை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நகர்த்தல் விண்ணப்பத்தின் மூலம் எடுத்துக் கொள்ளப்பட்டு எதிராளிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த சில வழக்குப் பிரிவுகள் பொலிஸாரினால் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வெயிலில் உணவுப் பொருட்களை வைத்துக் விற்பனை செய்த வர்த்தகருக்கு ரூ.41,000 அபராதம்!
செய்திகள்

வெயிலில் உணவுப் பொருட்களை வைத்துக் விற்பனை செய்த வர்த்தகருக்கு ரூ.41,000 அபராதம்!

November 15, 2026
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அழைப்பு!
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அழைப்பு!

November 15, 2026
இலங்கையில் பிறப்பு வீதம் வரலாறு காணாத வீழ்ச்சி! 10 ஆண்டுகளில் 1.2 இலட்சம் பிறப்புகள் குறைவு
செய்திகள்

இலங்கையில் பிறப்பு வீதம் வரலாறு காணாத வீழ்ச்சி! 10 ஆண்டுகளில் 1.2 இலட்சம் பிறப்புகள் குறைவு

November 15, 2026
தரம் 13 மாணவர்களுக்கு ரூ.10,000 முதலீட்டு வாய்ப்பு; 2027 வரவு செலவுத் திட்டத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

தரம் 13 மாணவர்களுக்கு ரூ.10,000 முதலீட்டு வாய்ப்பு; 2027 வரவு செலவுத் திட்டத்தில் புதிய திட்டம்!

November 15, 2026
ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி மலை குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு
செய்திகள்

ஐந்து மாதங்களாகக் காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி மலை குகையில் கைக்குழந்தையுடன் மீட்பு

November 15, 2026
84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சர்ச்சை; விளக்கமளித்தது Bing Chun நிறுவனம்!
செய்திகள்

84,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சர்ச்சை; விளக்கமளித்தது Bing Chun நிறுவனம்!

November 15, 2026
Next Post
இரண்டு வருடங்களாக தொலைத்தொடர்பு கம்பிகளை திருடி வந்த நால்வர் கைது!

இரண்டு வருடங்களாக தொலைத்தொடர்பு கம்பிகளை திருடி வந்த நால்வர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு