அகதி அந்தஸ்து பெற்ற பெண்ணொருவரை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
45 வயதான Majeda Sarassra என்ற பெண்மணியை நாடு கடத்தமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது கனடிய குடிவரவு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய உதவிக் குழுவின் முன்னாள் ஊழியரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார்.
ஒன்டாரியோவை தளமாக கொண்ட ஹமாசுடன் தொடர்புடைய நிவாரணக் குழுவில் பணிபுரிந்த பாலஸ்தீனிய பெண்ணை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்படவுள்ள பெண், 2016 இல் கனடாவில் அகதி அந்தஸ்து கோருவதற்கு முன்னர் Bethlehemமில் IRFAN-கனடாவில் பகுதி நேரமாக பணியாற்றினார்.