நிதி அமைச்சின் வழிகாட்டுதலில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வர்த்தக கண்காட்சி ஒன்று மட்டக்களப்பு நகரில் நேற்று முன்தினம் (2 7 )நடைபெற்றது.
மட்டக்களப்பு அரசடியில் நடை பெற்ற இந்த வர்த்தக கண் காட்சியில் உல்லாச பயணிகளை கவரும் வகையிலான கைத் தொழில் உற்பத்தி பொருட்கள், கைப் பணிப் பொருட்கள், கைத்தறி ஆடைகள், உற்பத்தி பொருட்கள், மட்பாண்ட உற்பத்தி பொருட்கள், மரம் முந்திரிகை மற்றும் உணவு உற்பத்தி பொருட்கள் உட்பட பல்வேறு உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் நிதி அமைச்சின் வழிகாட்டுதலில் இந்த உள்ளூர் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வர்த்தக கண்காட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தேர்ச்சி பெற்ற உள்ளூர் உற்பத்தி கைப்பணியாளர்கள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு தங்களது பொருட்களை காட்சிப்படுத்தி பொதுமக்களுக்கு நியாய விலையில் விற்கும் பணிகளினை மேற்கொண்டனர்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி முகுந்தன் வைபவ ரீதியாக இந்த வர்த்தக கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்
மட்டக்களப்பு அரசடி மக்கள் வங்கியின் வளாகத்தில் பிராந்திய முகாமையாளர் என். அருட்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய உதவி முகாமையாளர்களான கே .பிரதீப் எம் .மதியழகன் உட்பட அரச திணைக்களங்கள் மற்றும் பல்வேறு அரசு அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் பலரும் இங்கு பிரசன்னமாக இருந்தனர்.
இந்த வர்த்தக கண்காட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தேர்ச்சி பெற்ற உள்ளூர் உற்பத்தி கைப்பணியாளர்கள், உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு தங்களது பொருட்களை காட்சிப்படுத்தி பொதுமக்களுக்கு நியாய விலையில் விற்கும் பணிகளில் மேற்கொண்டனர்
இந்த வர்த்தக கண்காட்சி சர்வதேச சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.