இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் மறைவு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (30) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த அவரின் மறைவிற்கு பொது மக்களும், முக்கிய தரப்பினரும் சமூக ஊடகங்கள் வாயிலாக தங்கள் இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர்.
அதே சமயம் அவரது மறைவிற்கு எமது Battinaatham ஊடகமும் தனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது.