ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் திருத்தம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓய்வூதியம் பெறாத தனியார் மற்றும் பகுதி அரச ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஊழியர் சேமலாப நிதியம் நிறுவப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஊழியர் சேமலாப நிதியத்துக்கு உள்வாங்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவர்களுக்குத் தரமான மற்றும் வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில் குறித்த சட்டம் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்காகத் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.