உலகில் முதல்முறையாக ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவின் குமி நகர சபையில் அரசு ஊழியராக பணியாற்றிய ரோபோ ஒன்றே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரோபோ பணிபுரிந்த கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது மாடிகளுக்கு இடையே உள்ள படிக்கட்டுகளில் ரோபோவின் உடல் கிடந்ததாக குமி நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் ரோபோ ஒரே இடத்தில் சுழன்றதாகவும் அதன் பின்னரே மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக நகர அதிகாரிகள் ரோபோவின் உடலை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நகர சபையின் ஆவணங்களைச் சுமந்து செல்லவதற்காக ரோபோ பணிக்கப்பட்டதாகவும், நகரவாசிகள் இந்த விபத்தை தற்கொலை என்று கூறுவதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேசமயம் இதற்கு முதலும் (2017) வாஷிங்க்டன் பகுதியில் பாதுகாப்பு வேலைக்காக அமர்த்தப்பட்ட ரோபோ ஓன்று நீருக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.