Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கில் 300 சிறார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம்!

மண்முனை வடக்கில் 300 சிறார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 12 முன்பள்ளிகளில் கல்வி பயிலும் 300 சிறார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டத்தின் தெளிவூட்டல் ஆரம்ப நிகழ்வானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வி. வாசுதேவன் அவர்களின் தலைமையில், மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (02 ) பி.ப. 3.30 மணிக்கு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி சார்பாக சிரேஸ்ட பொதுச்சுகாதரா மேற்பார்வையாளர் திருமதி கே. சிவவரதன், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு தி. மேகராஜ், தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு அலுவலர் திரு என். துஜோகாந்த், முழுமதி சகவாழ்வுச் சங்கத்தின் தலைவர் திரு எஸ். முகுந்தன், திட்ட முகாமையாளர் திரு வீ.குகதாசன், முழுமதி சகவாழ்வுச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வந்த அசாதாரண நிலைமையினைக் கடந்து வந்த மக்கள் இன்னும் அதன் சுமையை முகாமை செய்வதிலும், தமது பிள்ளைகளுக்கான போதிய போசாக்கான உணவு வழங்குவதிலும் உள்ள இடர்பாடுகளை ஓரளவு சீர் செய்யும் வகையிலும், முன்பள்ளி சிறார்கள் எதிர்நோக்கும் விருத்தி, வளர்ச்சி சவால்களை வெற்றி கொள்ளும் வகையிலும் இவ்வாறான திட்டம் முன்னெடுக்கப்படகின்றமை வரவேற்கப்படுகின்றது எனவும், அத்துடன் இயற்கைமுறை உணவுகளையும் சமூக மட்டங்களில் கிடைக்க கூடிய சத்தானதும், நம்பகமானதுமான உணவுகளை உரிய சுகாதரா முறைப்படி சமைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்பள்ளி ஆசிரியர்கள் கவனத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டும் எனவும், தொடர்ந்து திட்டத்திற்கான உணவு வழங்கலை எதிர்வரும் 08.07.2024 முதல் வழங்கி வைக்க முடியும் எனவும் அதன் திட்ட முகாமையாளர் தெரிவித்தார்.

மேலும் உள்ளூர் மட்டங்களில் சுயதொழில் ஒன்றை மேற்கொள்ளும் வருமானம் ஈட்டக்கூடிய உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் கொள்வனவைச் செய்வதன் மூலம் இயற்கை உணவுகளை பெற்றுக் கொள்ளும் அதேவேளை அவர்களையும் மேம்படுத்த முடியும் என்பதோடு சமூகத்தின் பங்களிப்பையும் இதன்பால் பெற்றுக் கொண்டு எதிர்பார்த்த இலக்கை இந்த திட்டத்தின் மூலம் அடைய முடியும் என பிரதேச செயலாளர் அவர்களும், சமூகம் தந்திருந்த அரச பிரதிநிதிகளும், திட்ட அலுவலர்களும் குறிப்பிட்டிருந்தனர், அத்தோடு சிறியதொரு நிறுவனமாக இருந்த கிராம மட்ட நிறுவனம் இவ்வாறானதொரு நிதியீட்டைப் பிரதேச மட்டத்திற்கு கொண்டுவந்ததை இட்டு பிரதேச செயலாளர், முழுமதி சகவாழ்வுச் சங்க தலைவர் திரு எஸ்.முகுந்தன் மற்றும் அணியினரை பாராட்டியதுடன் நிதி வழங்குனரான நீலன் திருச் செல்வம் நிதியத்திற்கும் தனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்புடையசெய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
Next Post
தொழில்நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்ள  தயாராக வேண்டும்; கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

தொழில்நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்ள தயாராக வேண்டும்; கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.