பாடசாலைக் கல்வியின் போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கல்விக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவிதமான நாசகார செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் ஜனாதிபதி தெரிவிக்கையில்,
ஒழுக்கத்துடன் பணியாற்றுங்கள். ஒழுக்கம் இல்லாமல் கல்விச் சேவையை நடத்த முடியாது. கடந்த காலங்களில் நடந்த வேலை நிறுத்தம், பாடசாலைகளில் நடக்கும் வேலை நிறுத்தம் சரியில்லை. காரணம் இல்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022ல் சம்பள உயர்வு வழங்கிய ஒரே துறை.. இந்த வருடம் அனைவருக்கும் 10,000 ரூபா உதவித்தொகையை இருமுறை வழங்கினோம். அடுத்தநாளே பணிப்புறக்கணிப்பு. அவர்கள் இப்படி விளையாட விடுவது நல்லதல்ல. நான் சட்டமா அதிபருடன் கலந்துரையாடினேன்.
இதனால் சிங்களப் பிள்ளைகளின் கல்விக்கே கேள்விக் குறி, ஏனைய மொழி பாடசாலைகள் உரிய பணியை தொடர்கின்றனர்.
காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை யாரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வகுப்புகளை சீர்குலைக்க முடியாது சட்டத்தினை உருவாக்க ஆலோசனைகளை வழங்கி உள்ளேன்..
வருங்கால சந்ததியினருக்காக நாம் அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இதற்குப் பிறகு என் மீது கோபம் கொள்ள வேண்டாம், இந்த விடயத்தில் நான் இன்னும் கடுமையாக நடந்து கொள்வேன். என்றார்.