Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இருட்டைப் போக்குவதற்கான வழியை நாம் கண்டு பிடிக்க வேண்டும்: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

இருட்டைப் போக்குவதற்கான வழியை நாம் கண்டு பிடிக்க வேண்டும்: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கடந்த காலத்தில் இந்த நாடு பற்றி எரிந்தபோது ஓடி ஒழிந்தவர்கள் இன்று ஜனாதிபதி தேர்தல் என்றவுடன் நானும் ஜனாதிபதிதான் நானும் ஜனாதிபதிதான் என்று கூவிக்கொண்டு பலர் வருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இதில் பலர் இந்த நாடு பற்றி எரிந்தபோது, நாட்டு மக்கள் தவிர்த்தபோது வீட்டு மூலைக்குள் ஒழிந்திருந்தவர்களும் இந்த நாடு இன்னும் நூறு வருடத்திற்கு மேல் எழமுடியாது என்று அறிக்கை விட்டவர்களுமே இவர்களாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுக்கு சொந்தமான காணியில் குடியிருந்து இதுவரையில் காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாவது நடமாடும் சேவை இன்று (04) மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் இணைந்து இந்த நடமாடும் சேவையினை நடாத்தினார்கள்.

இதன் ஆரம்ப நிகழ்வு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு-திருகோணமலை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் என்.விமல்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் உட்பட பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த நாடு பற்றி எரிந்தபோது எங்களுக்கு இரண்டு பிரச்சினைகள் அடுத்ததடுத்து ஏழுந்தது. ஒன்று கொவிட் தொற்று அதனை தொடர்ந்து பொருளாதார வீழ்ச்சி. நாடு வீழ்ச்சி ஏற்பட்டபோது வரிசை நிலையொன்று ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. அவ்வாறான நிலையிருந்திருந்தால் இந்த நிகழ்வு நடைபெற்றிருக்காது. அன்று அதனை வைத்து பலர் அரசியல் செய்தனர். அதே நிலைமை இன்று இருந்திருந்தால் நீங்கள் எல்லாம் பயணம் செய்து இங்கு வந்திருக்கமாட்டீர்கள்.

ஒரு பிரச்சினை வரும்போது நாங்கள் மக்களை விட்டு விட்டு ஓடிவிட முடியாது. அவ்வாறு ஓடுவோமானால் நாங்கள் மக்கள் தலைவர்களாக இருக்க முடியாது.யுத்த காலத்தில் மக்கள் தலைவர்கள் அவ்வாறுதான் செயற்பட்டார்கள். நாட்டினை விட்டு ஓடினார்கள். நாட்டில் அரசாங்கம் என்ற தரப்பில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அயராத முயற்சி பல அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்று ஒரு குறுகிய காலத்திற்குள் நாடு படிப்படியாக வளர்ச்சி கண்டுவருகின்றது.

இருட்டினை எல்லோராலும் திட்டமுடியும். ஆனால் அந்த இருளைப்போக்குவதற்கான வெளிச்சத்தினை கொண்டுவருபர்களாக நாங்கள் மாறவேண்டும். அந்த இருட்டைப்போக்குவதற்கான வழியை கண்டுபிடிக்கவேண்டும். அந்த வழிதான் வெளிச்சத்தினை ஏற்றுவது. அந்த வழியாக மக்கள் தலைவர்கள் மாறவேண்டும்.

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போன 12 எருமை மாடுகளில் 7 மீட்பு; இருவர் கைது!
செய்திகள்

காணாமல் போன 12 எருமை மாடுகளில் 7 மீட்பு; இருவர் கைது!

October 6, 2026
சம்மாந்துறையில் 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞர் கைது!
செய்திகள்

சம்மாந்துறையில் 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞர் கைது!

October 6, 2026
சட்டவிரோத இணைய சூதாட்டம்; எட்டு இந்தியப் பிரஜைகள் கைது!
செய்திகள்

சட்டவிரோத இணைய சூதாட்டம்; எட்டு இந்தியப் பிரஜைகள் கைது!

October 6, 2026
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது!

October 6, 2026
6 மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

6 மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

October 6, 2026
“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
Next Post
சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.