வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் சில வகை மருந்துகள், மாத்திரைகளை இளைஞர்கள் மருந்தகங்களில் போதைக்காக கொள்வனவு செய்வது அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், யுக்திய நடவடிக்கையில் போதைப்பொருள் வியாபாரிகள் என அடையாளம் காணப்பட்ட 5979 பேரில் 5449 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அது 91% சதவீதமாக காணப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.