Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆளுநரால் வழங்கப்படவுள்ள பதவிகளை ஏற்க வேண்டாம்; முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

ஆளுநரால் வழங்கப்படவுள்ள பதவிகளை ஏற்க வேண்டாம்; முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

2 years ago
in செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவிகளை வகித்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்படவுள்ள இணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க வேண்டாமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் மேயர்களுக்கு விசேட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் தவிசாளர்கள் மற்றும் மேயர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் வாகனங்கள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தேர்தல் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். ஏனெனில் இவர்களில் பெரும்பாலான தலைவர்கள் உள்ளாட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களாக உள்ளனர், அவர்களின் வேட்பு மனுக்கள் இன்னும் செல்லுபடியாக உள்ளது.

மறுபுறம், இது மூன்று மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் உங்களின் ஆதரவைப் பெறுவதற்கான இலஞ்சமாக நாங்கள் கருதுகின்றோம். இது மிகவும் தீவிரமான விடயமாகும்., இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

இந்த இணைப்பாளர் பதவிகளை நமது கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் பொறுப்பேற்கக் கூடாது என கட்சித் தலைமையால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது கட்சியின் உறுப்பினர்களை இவ்வாறான பதவிகளை கொடுத்து தங்களுக்கு சார்பாக மாற்றிக்கொள்ளப்பார்க்கின்றனர். இவ்வாறான ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டிற்கு எமது கட்சி ஒருபோதும் துனைபோகாது.

ஆளுநர் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவுகளை அனுப்பி இந்த சட்டவிரோத நியமனங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு என்னால் தேர்தல் ஆணையாளருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளேன்.

கட்சியின் தீர்மானத்தை மீறி நீங்கள் செயற்பட்டால் உங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

காணாமல் போன 12 எருமை மாடுகளில் 7 மீட்பு; இருவர் கைது!
செய்திகள்

காணாமல் போன 12 எருமை மாடுகளில் 7 மீட்பு; இருவர் கைது!

October 6, 2026
சம்மாந்துறையில் 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞர் கைது!
செய்திகள்

சம்மாந்துறையில் 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞர் கைது!

October 6, 2026
சட்டவிரோத இணைய சூதாட்டம்; எட்டு இந்தியப் பிரஜைகள் கைது!
செய்திகள்

சட்டவிரோத இணைய சூதாட்டம்; எட்டு இந்தியப் பிரஜைகள் கைது!

October 6, 2026
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது!

October 6, 2026
6 மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

6 மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

October 6, 2026
“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
Next Post
தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்!

தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு