உங்களது வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் போனின் மொத்த ஸ்கிரீனையும் யாருக்கு வேண்டுமானலும் ஷேர் செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படியான புதிய அம்சத்தை மெட்டா (Meta) நிறுவனம் விரைவில் கொண்டுவர இருக்கிறது. இந்த வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷேரிங் (WhatsApp Screen Sharing) எப்படி வேலை செய்யும் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் ஆப்பை (App) பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் 40 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் பயனர்களாக உள்ளனர். இத்தனை கோடி பேர் பயன்படுத்துகிறார்கள் என்றால், வாட்ஸ்அப்பில் எவ்வளவு சிறப்பான அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இதனாலேயே வாட்ஸ்அப் நிறுவனம், அடிக்கடி புதுப்புது அப்டேட்களை கொண்டுவந்து வாட்ஸ்அப் யூசர்களை (Users) தொடர்ந்து அசத்தி வருகிறது.
அந்த வரிசையில், இப்போது வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர உள்ளது. இந்த அம்சம் மூலம் உங்களது போனின் வாட்ஸ்அப் ஸ்கிரீனை மட்டுமல்லாமல், மொத்த ஸ்கிரீனையும் யாருக்கு வேண்டுமானாலும் உங்களால் ஷேர் செய்துகொள்ள முடியும்.
இந்த அம்சம் பொதுவாக வீடியோ கால் ஆப்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஸ்கைப் (Skype), கூகுள் மீட் (Google Meet), ஜூம் (Zoom) வீடியோ காலிங் ஆப்ஸ்களில் (Video Calling Apps) ஸ்கிரீன் ஷேரிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரே நேரத்தில் பலர் வீடியோ கான்பரன்ஸ் (Video Conference) மூலம் இணைக்கப்பட்டிருக்கும் போது, அதை ஹோஸ்ட் (Host) செய்யும் நபரோ அல்லது வேறு யாரோ தங்களது மொபைல் ஸ்கிரீனையோ அல்லது லேப்டாப் ஸ்கிரீனையோ அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்துகொள்ள முடியும்.
இந்த வசதியை மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதற்கான முதல்கட்ட பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இப்போது, வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (WhatsApp beta) சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அம்சம் வந்தால், வாட்ஸ்அப் பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும், வீடியோ கால் மூலம் தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் உடன் போசும்போது, அவர்களது போனின் ஸ்கிரீனை அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்துகொள்ள முடியும்.
பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் வந்த உடன் நீங்கள் வீடியோ கால் செய்யும்போது, கீழே மைக் (Mic), வீடியோ ஹைட் (Video Hide), டிஸ்கனெக்ட் (Disconnect) ஆகிய டேப்களுக்கு இடையே ஸ்கிரீன் ஷேரிங் டேப் இடம்பெற்று இருக்கும்.
அதை கிளிக் செய்த உடன் உங்களது போனின் ஸ்கிரீன் அனைவருக்கும் தெரியும்படி டெலிகாஸ்ட் செய்யப்படும். அதன் பின்பு மீண்டும் அதே ஸ்கிரீன் ஷேரிங் டேப்பை கிளிக் செய்தால், உங்களது ஸ்கிரீன் அவர்களுக்கு தெரியாது. இந்த அப்டேட் விரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.