பாகிஸ்தானில் மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால் பிறந்து 15 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தந்தை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவுசாகர் பெரோஸ் நகரத்தில் வாழ்ந்து வந்த தாயாப் என்ற நபரின் மனைவி கடந்த 15 நாட்கள் முன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
எனினும் குழந்தையின் ஆரோக்கியம் குன்றியதால் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த அந்த குடும்பத்தினரிடம் மருத்துவ செலவுக்கு பணம் இல்லததால், தந்தை பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார்.
இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது. தகவல் அறிந்த பொலிசார் குழந்தையின் பெற்றோரை கைது செய்து, புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மருத்துவ செலவுக்கு பணம் இல்லத்ததால் குழந்தையை புதைத்தாக தாயாப் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதேவேளை பாகிஸ்தான் தலைநகர் லாகூர் மாகாணத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களின் வீட்டில் வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பலமுறை நிர்வவணப்படுத்தி அடித்து துன்புறுத்திய சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.