எதிர்வரும் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்று முதல் தரம் ஒன்பது வரை மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை இடைநிறுத்துவது தொடர்பில் இன்றைய தினம் யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், கல்வியிலாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு இடையில் முக்கிய கூட்டமொன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களைக் கட்டுப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அறியப்பட்டாலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை வடமாகாண ஆளுநர் இது பற்றி அறிந்து வினவிய போது இவ் விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.
இன்றைய கலந்துரையாடல் நிறைவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:-
1 . பெற்றோருக்கு முதலில் விழிப்புணர்வு கருத்தமர்வுகளை தனியார் கல்வி நிலையங்களையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு பிரதேச செயலக மட்டங்களில் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
2 . தரம் 9 வரையான மாணவர்களுக்கான பிரத்தியோக கல்வி நடவடிக்கை முற்றுமுழுதாக ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட வேண்டும்.
3 . கல்வி நிலையங்கள் சுகாதார வசதி, வகுப்பறை பிரமாணம் அரச கட்டடத் திட்டம் போன்றவற்றுக்கமைய அமைந்திருக்க வேண்டும்.
- ஆளுநர், கல்வி திணைக்களத்துடன் கலந்துரையாடி தனியார் கல்வி நிலைய வரையறை வெளியிடப்படும். அதற்குள்ளடங்கும் கல்வி நிலையங்கள் உள்ளூராட்சி நிறுவனம், பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் கட்டாயமாகும்.
5 . தனியார் கல்வி நிலையங்கள் 15 தொடக்கம் 30 நிமிடம் வரை ஆன்மிகம், சமூகம் சம்பந்தப்பட்ட விடயங்களைபோதிக்க வேண்டும்.
6 . இந்த செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறுதை அவதானித்து முன்னறே்றம் காணப்பட சுகாதாரத்துறை, காவற்துறை, மதம் சார் பிரதிநிதி, சிறுவர் பாதுகா்பு உத்தியோகத்தர்கள், கல்விசார் துறையுடன் தனியார் கல்வி நிலையத்தினர் தமக்கென சங்கத்தை உருவாக்க வேண்டும். உருவாக்கும் பட்சம் அவற்றின் பிரதிநிதிகளையும் இணைத்து குழுவானது பிரதேச, மாவட்ட மட்டத்தில் உருவாக்கப்படவுள்ளது.
7 . இத் தீர்மானங்கள் அனைத்தும் யூலை 1 ம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படுமென வலியுறுத்தினார்.