Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுவர்களிடையே டெங்கு, சிக்குன்குனியா மற்றும் இன்ஃப்ளுயன்ஸா நோய்கள் பரவி வருவதாக எச்சரிக்கை

சிறுவர்களிடையே டெங்கு, சிக்குன்குனியா மற்றும் இன்ஃப்ளுயன்ஸா நோய்கள் பரவி வருவதாக எச்சரிக்கை

1 year ago
in செய்திகள்

அண்மைய காலங்களாக சிறுவர்களிடையே டெங்கு, சிக்குன்குனியா மற்றும் இன்ஃப்ளுயன்ஸா போன்ற நோய்கள் அதிகளவு பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை (LRH) விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளதாவது,

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நுளம்புகளால் பரவும் நோய்கள் அதிகரிப்பதற்கு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அமைந்துள்ளது.

நுளம்புகள் பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் தங்களது வீடுகளையும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் அறிகுறிகளைக் கொண்ட சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோய் ஆபத்தானதாக இருப்பதோடு, சிக்குன்குனியா பெரும்பாலும் நோயாளிகளுக்கு பல மாதங்களாக நீடிக்கும் நீண்டகால மூட்டு வலியால் அவதிப்பட வைக்கிறது.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு சிக்குன்குனியா கடும் உடல்நல பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுகள் வயிற்றிலுள்ள சிசுவை பாதிக்கக்கூடும்.

நுளம்புகளால் பரவும் நோய்களுக்கு மேலதிகமாக, சிறுவர்களிடையே இன்ஃப்ளுயன்ஸா நோய்கள் வேகமாகப் பரவி வருகிறது. பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் விழிப்புடன் இருப்பதோடு, சரியான நேரத்தில் வைத்திய உதவியை நாட வேண்டும். நோய் பரவலைத் தடுக்க சரியான முறையில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

வானிலை மற்றும் பருவகால மாற்றங்களுடன் தொடர்புடைய தொற்று நோய்களின் சிறுவர்களிடையே அதிகரித்து வருவதால் பொது விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மருத்துவ சமூகம் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

Tags: BatticaloaBattinaathamnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
Next Post
கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் ஆணையாளருக்கு மாற்றம்

கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் ஆணையாளருக்கு மாற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு