Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் ஆணையாளருக்கு மாற்றம்

கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் ஆணையாளருக்கு மாற்றம்

1 year ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளுராட்சி சபைகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளுராட்சி ஆணையாளருக்கு மாற்றப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிறைவடைந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனியொரு கட்சி பெரும்பான்மையைப் பெற்ற 161 உள்ளுராட்சி சபைகளுக்கான தலைவர்கள் நியமனம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (31) வெளியிடப்பட்டது.

அதன்படி, மேற்படி உள்ளுராட்சி சபைகள் நாளை முதல் அடுத்த சில நாட்களில் கூடவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 178 உள்ளுராட்சி சபைகளில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறாததால், அந்த நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளுராட்சி ஆணையாளருக்கு உள்ளது.

அதன்படி, உள்ளுராட்சி சபைகளுக்கான மேயர்கள், பிரதி மேயர்கள், தலைவர்கள் மற்றும் உப தலைவர்கள் நியமிக்கப்படும் விதம் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் செய்தித்தாள் விளம்பரங்களை முதலில் வெளியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியான 14 நாட்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட சபைகளின் உறுப்பினர்கள் கூடி, தங்கள் தலைவர்களை நியமிக்க வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான மேயர்கள், பிரதி மேயர்கள், தலைவர்கள் மற்றும் உப தலைவர்களுக்கான நியமனம் ஜூன் 17 ஆம் திகதிக்குப் பிறகு இடம்பெறும்.

நியமனங்கள் வழங்கப்படும் திகதிகள் குறித்து உள்ளுராட்சி ஆணையாளர் முன்கூட்டியே அறிவிப்பார் என்றும், நாளொன்றில் மாகாணத்தில் உள்ள ஒரு உள்ளூராட்சி சபையொன்றுக்கு மட்டுமே நியமனத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி எடுத்த பெண்ணிற்கு விளக்கமறியலில்
செய்திகள்

சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி எடுத்த பெண்ணிற்கு விளக்கமறியலில்

July 31, 2026
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
செய்திகள்

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

July 31, 2026
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!
செய்திகள்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

July 31, 2026
வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!
செய்திகள்

வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!

July 31, 2026
அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்; வெளியான முக்கிய அறிக்கை!
செய்திகள்

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மிகப் பாரியளவு பணம்; வெளியான முக்கிய அறிக்கை!

July 31, 2026
பாடசாலை மாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டு; 5 மாணவர்கள் கைது!
செய்திகள்

பாடசாலை மாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டு; 5 மாணவர்கள் கைது!

July 31, 2026
Next Post
இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கோவிட் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை; மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்

இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கோவிட் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை; மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு